news

Saturday, May 19, 2012

ஷாருக் மீது நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

மும்பை வான்கடே மைதானத்தில் பாதுகாவலருடனும், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடமும் தகராறில் ஈடுபட்ட ஷாருக்கான் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் வான்கடே மைதானத்தில் ஷாருக்கான் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அதிரடியாக அறிவித்தது. ஆனால் பிசிசிஐ இந்த சம்பவத்தில் இறுதி முடிவை தாங்கள் தான் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
பிசிசிஐயுடன் ஷாருக்கானுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஐபிஎல் கொல்கத்தா அணியை ரூ.300 கோடிக்கு ஷாருக்கான் வாங்கியுள்ளார்.
விளம்பர தூதராகவும் அவர் வலம் வருகிறார். இந்த சீசன் துவக்கத்தில் தொடரில் இருந்து விலகுவதாக மிரட்டல் விடுத்த புனே அணியை சமாதானம் செய்ததே ஷாருக்கான் தான். இது போன்ற பல விஷயங்களில் பிசிசிஐக்கு ஷாருக்கான் பக்கபலமாக இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பது இரண்டாம் பட்சம் தான் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment