news

Wednesday, July 4, 2012

அரச சார்பு இணையத்தளங்கள் இனந்தெரியாதோரால் கைப்பற்றுட்டுள்ளது


அரச சார்பு இணையத்தளங்கள் இனந்தெரியாதோரால் கைப்பற்றுட்டுள்ளது
சில தினங்களாக இலங்கையில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிடாமல் முடக்கிய இலங்கை அரசு, இலங்கை ஊடகவியலாளர்களையும், இலங்கையில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனங்களையும் முடக்கி இருக்கிறது.
இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFC), மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற அரச சார்பான உத்தியோகபூர்வ இணையத்தளங்களும் இனந்தெரியாத சில புலம்பெயர் விசமிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி அரச சார்பான இணையத்தளங்களை ஒருவர், குறித்த ஒரு குழுவினர் தான் கைப்பற்றியுள்ளதாக தம்மால் கருத முடிகின்றது என அரச கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில அரச இணையத்தளங்களை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அரச சார்பான தளங்களைக் கைப்பற்றியுள்ள மர்ம சக்திகளின் நோக்கம் என்ன, இவர்களின் பின்னால் யார் இயங்குகின்றார்கள் என்பன தெரியாத இலங்கை அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இலங்கை அரசைப் பற்றிய உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை அடக்கி வரும் இந்நிலையில் அரச சார்பு தளங்கள் மீதான இப்பாரிய தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
அத்தோடு புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து அரசுக்கு எதிரான இந்த தாக்குதலில் இன்னும் பல இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கீழே இணைத்துள்ள இணையத்தளங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
http://epdp.net/
http://jvpnews.com/
http://slfpnews.com/

பிரசன்னா சினேகா 2 மணிநேர திருமண நிகழ்ச்சித்தொகுப்பு


ஐ.நா பொதுச்செயளாரும் சிறிலங்காவுக்கு கண்டனம்

சிறிலங்காவில் சிறிலங்கா மிரர் மற்றும் சிறிலங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இணையத்தளங்களின் மீதான நடவடிக்கை மற்றும் ஒன்பது ஊடகவியலாளர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் இணையத்தள பணியகங்கள் மீதான நடவடிக்கை குறித்து ஐ.நா அறிந்துள்ளது.
எந்தத் தலையீடுகளும் இன்றி ஊடகவியலாளர்கள் பணியாற்றக் கூடிய நிலை இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கு மட்டுமன்றி, ஏனைய நாடுகளுக்கும் பல சந்தர்ப்பங்களில் நாம் கூறியுள்ளோம்.
அந்தப் பொதுவான கோட்பாடு இந்த விவகாரத்திலும கூடப் பொருத்தமானது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இணையத்தளங்கள் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்காவும், ஐரோய்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.