
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு இராணுவ வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனது சக இராணுவ வீரர் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/3x2LMYR0bxU" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment