news

Wednesday, May 16, 2012

மடு மாதாவின் சிலையைக் காப்பாற்றியது விடுதலைப் புலிகளே: பிரையன் செனிவிரட்ன !


மன்னாரில் உள்ள பழமைவாய்ந்த மடு மாதா சிலையை பல முறை அழிவில் இருந்து காப்பாற்றியது விடுதலைப் புலிகள் தான் எனப் பிரையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 1920ம் ஆண்டு வத்திக்கானில் உள்ள போப்பிடன் அனுமதிபெற்று, மடுவில் ரோமன் கத்தோலிக்கர்கள் புனித மாதா சிலையை நிறுவினர். மிகவும் பழமைவாய்ந்த இச் சிலையின் அருகில் இயேசுவின் திருவுருவமும் உள்ளது. 1988ம் ஆண்டு முதல் இலங்கைப் படையினர், மடு மாதா அலயம் மீது தாக்குதலை நடத்திவந்தனர் என்றும் 1999ம் ஆண்டு காலப்பகுதியிலும் 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம் மன்னாரை முற்றுகையிட்டபோதும் விடுதலைப் புலிகளே மாதா சிலையை காப்பாறினர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை, தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே பிரையன் செனிவிரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment