news

Tuesday, May 22, 2012

20 ஆம் நூற்றாண்டிலும் இப்படி நிகழுமா

புராண காலத்தில் தான், பெண்களின் மூக்கை அறுப்பது குறித்து நாம் படித்திருப்போம். குறிப்பாக சூர்பனகையின் மூக்கு அறுக்கப்பட்ட விடையம். ஆனால் ஆயிஷா வின் விடையம் 20ம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது ! அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மிக மிகப் பிரபல்யமான ரைம்ஸ் சஞ்சிகை, இதுவரை காலமும், அரசியல் தலைவர்களையும் பிரமுகர்கள் படத்தையுமே தனது அட்டைப் படத்தில்(முன்புறத்தில்) பிரசுரித்து வந்தது. ஆனால் அது தற்போது ஒரு சாதாரண பெண்ணான ஆயிஷா குறித்து தகவல்களை சுமந்து வந்துள்ளது !

சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலம் !

ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த ஆயிஷா என்னும் பெண், சுமார் 12 வயதில் இருக்கும்போதே அவரது தகப்பனார் தனது மகளை ஆப்கான் தீவிரவாதி ஒருவருக்கு கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளாராம். தான் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் தான், இவர் இவ்வாறு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார். இதனால் ஆயிஷா மாப்பிள்ளை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் வசிக்குமாறு மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்(2010) ஆயிஷா 20 வயதாக இருக்கும்போது, அவருக்கு கட்டாய கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆயிஷாவுக்கு தனக்கு கணவராக வரப்போகும் நபரைப் பிடிக்கவில்லை. இதனால் அவர் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ ஆயிஷாவை மடக்கிப் பிடித்துவிட்டனர்.

ஆயிஷா தப்பிச் செல்ல முற்பட்டதற்கான தண்டனையாக, அவரின் மூக்கையும் காதுகளையும் அறுத்து எறிந்துள்ளார் மாப்பிள்ளை. மூக்கை வெட்டும் வேளையே தான் மயங்கிவிட்டதாக ஆயிஷா தெரிவித்துள்ளார். தான் மயக்கம் தெளிந்து எழுந்தவேளை, தனது காதுப் பகுதியிலும் மற்றும் மூக்குப் பகுதியிலும் ஈரப் பதம் இருந்ததை தான் உணர்ந்தேன் என்கிறார் ஆயிஷா. தான் இறக்கவேண்டும் என்பதற்காக, தன்னை ஒரு மலை அடிவாரத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள் என, தனது சோகக் கதையை அழுதவாறு விவரித்தார் ஆயிஷா. தன்னால் நடக்கக்கூட முடியாத நிலையில், தான் தவண்டு தவண்டு, தனது சிறிய தந்தையாரின் வீட்டை அடைந்ததாகவும், அவர் பின்னர் தன்னை அருகில் உள்ள தற்காலிக அமெரிக்க வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார் ஆயிஷா.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவென இருந்த இவ்வைத்தியசாலையில், இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஒரு தர்மஸ்தாபனம் ஊடாக அவர் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளர். 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அமெரிக்க காஸ்மெட்டிக் வைத்தியசாலை ஒன்று இவருக்கு செயற்கை மூக்கை பொருத்த முன்வந்துள்ளது. 2011ம் ஆண்டு ஆயிஷாவுக்கு அமெரிக்க அரசு அகதிகள் அந்தஸ்து வழங்கியிருந்தது. தற்போது நடைபெற்ற சிகிச்சையில், பிளாஸ்டிக் மூக்கு ஒன்று ஆயிஷாவுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இவர் உடல் நலம் தேறிவருகிறார். 20ம் நூற்றாண்டில் கூடவா பெண்களுக்கு இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்று தாம் அதிர்சியடைந்துள்ளதாக பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் இவ்வாறானதொரு, மூட நம்பிக்கை இல்லையேல் தாமே தண்டனை வழங்கும் ஒரு மனப்போக்கு காணப்படுகிறது. அல்லாவின் பெயரையும், மதத்தின் பெயரையும் தீவிர போக்குடைய முஸ்லீம் நபர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 90% சதவீதமான பெண்கள், பாலியல் அல்லது மனரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. தீவிரவாதப் போக்குக்கொண்ட முஸ்லீம் ஆண்கள் முற்போக்காளர்களாக மாறவிட்டாலும், பரவாயில்லை, குறைந்த பட்சம் மனிதர்களாக வாழ முயற்சி எடுப்பது நல்லது !







No comments:

Post a Comment