news

Saturday, May 19, 2012

கிளிநொச்சி கொலையைக் காட்டிக்கொடுத்த மணிக்கூடு !




கனடாவில் இருந்து, கிளிநொச்சி சென்ற தமிழர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் ஆண் உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தனக்குச் சொந்தமான சுமார் 8 கடைகளையும், மற்றும் காணி ஒன்றையும் இலங்கை இராணுவத்திடம் இருந்து திருப்பிப் பெற்றுக்கொள்ளவே இவர் கனடாவில் இருந்து, கிளிநொச்சி சென்றிருந்தார். கடைகளை இலங்கை இராணுவத்தினர் காகில்ஸ் என்னும் பல்பொருள் அங்காடி நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாகவும், இதனால் இதனைப் பேசித்தீர்க கோத்தபாயவை தாம் சந்திக்கவிருப்பதாகவும் கொலைசெய்யப்பட்ட மகேந்திரராஜா அந்தோனிப்பிள்ளை தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு முதல் நாள் இரவே அவர் கோத்தபாயவின் அடியாட்களால் கொல்லப்பட்டுள்ளார். இதில் இன்னும் பல முக்கிய தடையங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

53 வயதுடைய மகேந்திரராஜா அந்தோனிப்பிள்ளையை, யாரோ காசுக்காகக் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை இராணுவம் முதலில் தெரிவித்தது. இருப்பினும் அவர் ஆண் உறுப்பு திட்டமிட்டவகையில் சிதைக்கப்பட்டிருந்ததை அடுத்து, அதை ஒரு காரணமாகக் காட்டி அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்திருக்கலாம், அதனால் அப்பெண்ணின் உறவினர்கள் அவரைக் கொலைசெய்திருக்கலாம் என்ற செய்தியையும் இலங்கைப் பொலிசார் பரப்பி வந்தனர். இருப்பினும் மகேந்திரராஜா அந்தோனிப்பிள்ளை திட்டமிட்ட வகையில் கொலைசெய்யப்பட்டுள்ளார், என்பதனையும் மற்றும் கொலைசெய்யப்பட்ட நேரத்தையும் துல்லியமாகக் காட்டிக்கொடுத்துள்ளது அவர் அணிந்திருந்த மணிக்கூடு !

சம்பவ தினத்தன்று அவர் தங்கியிருந்த அறைக்கு சிலர், இரவு 8 மணிக்கு பிற்பாடு சென்றுள்ளனர். அவரை அவ்வீட்டில் வைத்தே தாக்கியும் உள்ளனர். வீட்டின் நிலத்தில் ரத்தக்கறை படிந்திருப்பதை படம் 1ல் காணலாம்.

அவர் உயிருக்குப் போராடிய நிலையில், பலத்த காயங்களோடு தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இவரைப் பிந்தொடர்ந்த கொலையாளிகள், அவரை மேலும் பலமாகத் தாக்கியுள்ளனர். இவரது முகம், நெத்தி, கழுத்து, மற்றும் மார்புப் பகுதிகளை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சம்பவ தினமான மே 3ம் திகதி, அவரது மணிக்கூடு சரியாக இரவு 8.56 மணிக்கு நின்றுவிட்டது. தாக்குதல் காரணமாக அம்மணிக்கூடு நின்றுவிட்டது.

இதனைவைத்துப் பார்க்கும்போது, கொலை நடந்த நேரம் கூட துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பிரேதப் பரிசோதனை புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் எவ்வளவு கொடுமையாக தாக்கப்பட்டு துடிதுடித்து இறந்துள்ளார் என்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. களவுசெய்யும் கள்வர்கள் ஒருவரைத் தாக்கிவிட்டு அவர் பொருட்களை எடுத்துச் செல்லவே முற்படுவார்கள். இல்லையேல் கொலைசெய்துவிட்டு கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓட முற்படுவார்கள். ஆனால் இங்கே நடைபெற்றது ஒரு திட்டமிட்ட கொலை ! அவரைக் கொலைசெய்யும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு இது நடைபெற்றுள்ளது. மகேந்திரராஜா அந்தோனிப்பிள்ளை அவர்களின் லாப்-டொப் மற்றும் மோபைல் போன் ஆகிய இருபொருட்களை மட்டுமே கொலையாளிகள் கொண்டுசென்றுள்ளனர்.

அதாவது, மகேந்திரராஜா அந்தோனிப்பிள்ளை பாதுகாப்பு அமைச்சுடன் பேசினார் என்பதற்கான ஆதாரம் அவரது மோபைல் போன் தான். அதனையும் மற்றும் அவர் இரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருந்த லாப்-டொப்புமே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment