news

Friday, May 18, 2012

பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பு! தொடர்ந்து துப்பாக்கிகள் சூட்டுச் சத்தம்! படையினர் குவிப்பு


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன. அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவில் வெடிச்சத்தங்கள்! இராணுவம் குவிப்பு! பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு
முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் இன்று காலை ஏதோ பாரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தது. இந்த சத்தம் சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்தன.
முதல் என்னவோ இராணுவ பயிற்சி இடம்பெறுவதைப் போல தென்பட்டாலும் பின்பு A35 நெடுஞ்சாலையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன் காட்டுக்குள் விறகு எடுக்கப் போன சிலரும் இராணுவத்தினரால் பிடித்து அடித்து இழுத்து செல்லபட்டனர்.
இது குறித்து காட்டுக்குள் மணல் ஏற்றச் சென்ற நபர் ஒருவர் கூறுகையில்:
நாம் வழமை போல காட்டுக்குள் மணல் ஏற்றிக்கொண்டு இருந்த பொழுது வழமைக்கு மாறாக பல இராணுவத்தினர் காட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் இருந்தனர்.
நாம் அவர்களின் கண்ணில் தென்படாமல் எமது வாகனத்தையும் விட்டு விட்டு ஓடிவந்து விட்டோம் என்றார்.
மேலும் இன்று A9 பாதையிலும் A35 பாதையிலும் வழமைக்கு மாறாக பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment