நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இப்புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன
இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.


















லண்டனில்
வல்வை அரங்கத்தினர் மாபெரும் நூல் வெளியீட்டு விழா ஒன்றை
நடத்தவுள்ளனர்(04/06/2012). பிரபாகரன் தமிழரின் எழுச்சியின் வடிவம் என்ற
நூலை தமிழ் உணர்வாளர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதி சில தினங்களுக்கு
முன்னர் சென்னையில் வெளியிட்டிருந்தார். இந் நூலையே தற்போது வல்வை
அரங்கத்தினர் லண்டனில் வெளியிடவுள்ளனர். தேசிய தலைவர் குறித்து பல அரிய
செய்திகளையும், தமிழர் போராட்டங்களையும் உள்ளடக்கியுள்ள இப் புத்தகம்
ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று.
பிரித்தானியாவில்
இருந்து நாளை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழ் அகதிகளை,
குடிவரவு அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள், சித்திரவதைகளுக்கு
உள்ளாக்கப்படுவதாகவும், மேலும் சிலர் கொல்லப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற
முறைப்பாட்டை அடுத்தே அதிகாரிகள் திடீர் முடிவை எடுத்துள்ளதாக மேலும்
அறியப்படுகிறது. சமீபத்தில் பிரித்தானியப் பாராளுமன்றிலும் இதுதொடர்பான
விவாதம் ஒன்று நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் நாளை
சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படவிருந்தனர்.
தமிழகத்தில்
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து
அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும்,
நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக
கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள்
போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து
செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். 
















தமிழீழ
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு
வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த
ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின்
பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக
சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது,
ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை
எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி
பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி
பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை
கவனித்துவந்தது.
