
அங்கே தானிய என்று அழைக்கப்படும் பெண்ணோடு உல்லாசமாக இருக்க 800 டாலர்கள் விலைபேசியுள்ளனர். இருப்பினும் 250 டாலரை இறுதியாகக் கொடுத்து அவர்கள் அப்பெண்ணோடு காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9 அதிகாரிகளும் 2 உயரதிகாரிகளும் இவ்வாறு உல்லாசமாக இருந்ததை அமெரிக்க உளவுத்துறை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. இவ்விடையம் அமெரிக்க தலைமைக்கு தெரியவந்ததை அடுத்து இந்தப் 11 பேரையும் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் தீவிர விசாரணைகள் நடைபெறவிருப்பதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் சாதாரணமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அல்லர் என்றும், இவர்களுக்கு யாராவது போதைப் பொருட்களைக் கொடுத்து விலைமாதரிடம் செல்லுமாறு தூண்டியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனூடாக அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வரவு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கலாம் எனவும், மேலும் பல இரகசியங்கள் கசிந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விலைமாதுக்களை கைதுசெய்யாமல், அவர்களை இரகசிய அறை ஒன்றில் வைத்து அமெரிக்க உளவு நிறுவனம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment