news

Friday, April 27, 2012

யாழில் வைத்தே யாழ்ப்பாணத்தானுக்கு ஆப்படிக்கும் சிங்களவர்கள்!

யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வீதிகளின் புனர் நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கைகளில் சிங்கள ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வீதிகளை அகலமாக்கும் போது அங்கிருந்த மண் முதலில் வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் குறித்த இடத்தில் கிறசர் மண் பரவப்படுகின்றது.
குறித்த இடங்களில் வெட்டி எடுக்கப்படும் மண் அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே நயவஞ்சகமாகப் பேசி விற்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இந்த மண் வியாபாரமானது அங்கு கொடி கட்டிப் பறப்பதாக யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக வெட்டப்படும் மண் 3500 ரூபாயில் இருந்து 4500 ரூபாய் வரை பேசி விற்கப்படுகின்றது.
சிங்கள ஒப்பந்தக் காரர்களின் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தவிர, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏராளமான ஒழுங்கைகள், வீதிகள் போன்றவை குண்டும் குழியுமாக இருப்பதனால் மழை காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment