news

Friday, April 27, 2012

திருக்கேதீஸ்வர புனித பூமியிலிருந்து புத்த கோவில் விடுதிகள் அகற்றப்படவேண்டும்: ஜமமு

ஏனைய இந்து கோவில் உடைப்பு முயற்சிகள் கைவிடப்பட வேண்டும். ஹெல உறுமயவின் இந்து, முஸ்லிம் கோவில் அழிப்பு, புத்தமத ஆக்கிரமிப்பு திட்டம் இந்த நாட்டுக்கு பொருத்தமற்றது. புத்தமதத்தை பாதுகாப்பதென்பது ஏனைய மதங்களை அழிப்பதுமல்ல, ஆக்கிரமிப்பதுமல்ல.
தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது, திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது, திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இந்துக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பெறுமதி மிக்க சிலைகள் உடைத்து களவாடப்பட்டு விட்டது. இந்த பின்னணியில், இந்துமதத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் காலத்தின் கட்டாயமும் எழுந்த்துள்ளது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த நாட்டின் இந்து மத இருப்பை, வியாபஹத்தை, புனிதத்தை, மேலாக வரலாற்றை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துவிட்டது. இனவாதம் மதவாத மாகிவிட்டது.
இஸ்லாமிய சகோதரர்கள் சிறந்த முன்மாதிரியாக நடந்துகொண்டார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் பல அரசியல் நிலைப்பாட்டுக்கும் மத்தியிலும், தமது அமைச்சு மற்றும் ஆளுநர் பதவிகள் என்று கூட தயங்காது தமது மத விடயத்தில் ஒன்றுபட்டு வரலாற்றை அடித்து கூறினார்கள் தம்புள்ள பள்ளிவாசலை காப்பாற்ற முன்வந்தார்கள். தம் காட்டமான கருத்தினால் தம் இஸ்லாமிய பள்ளியின் பாரம்பரிய உரிமைகளை காப்பாற்றிய முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுநர் போல் வல்ல தமிழ் அமைச்சச்சர்கள் இந்துக்கோவில்களை காப்பாற்ற முன்வரமட்டர்களா எனும் ஆதங்கம் தமிழ் இந்து சைவ மக்களிடம் எழுந்து இருப்பது நியாயமானதே. அமைச்சர்களாய் இருந்தும் கூட பள்ளியை அகற்றினால் விளைவு பாரதூரமாகும் என்றார் நண்பர் ரவுப் ஹக்கீம்.
இன்னுமொரு அமைச்சர் ரிஷாத் பது இடீன் முரண்பட்டால் முரண்படத்தயார் என்றார். பெருமைக்குரியவர்கள், புத்தமதத்தை பாதுகாப்பதென்பது ஏனைய மதங்களை அழிப்பதல்ல ஆக்கிரமிப்பதுமல்ல. இது ஒரு பல்லினம் வாழும் நாடு, அமெரிக்காவைப்போல கானடாவைப்போல இங்கு எல்லோரும் வந்தேறு குடிகளே. ALL ARE MIGRANTS EXCEPT YAKKAAS AND NAAGAAS IF LIVING
அகில இலங்கை இந்து காங்கரஸ் கூட தமிழ் தலைவர்களுக்கு அவசர அழைப்பினை விடுத்துள்ளது இந்து கோவில்களை காப்பாற்ற வாருங்கள் என்று. அப்படி மோசமான நிலை. திருகேதீஸ்வரத்தில் ஒரு புத்தரும் இல்லை வெகுசில ராணுவத்தினர் மட்டுமே, ஏன் புத்தருக்கு கோவில்? சில வருடங்களின் பின் இங்கும் புத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லவா?. தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது இந்துக்கள் இங்கு வாழ்ந்தார்கள் எனும் வரலாற்றை மறைக்கவா?,
திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். பல இடங்களில் பெறுமதி மிக்க சிலைகள் உடைத்து களவாடப்பட்டு விட்டது. இந்துமதத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் காலத்தின் கட்டாயமும் எழுந்த்துள்ளது. அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த நாட்டின் இந்து மத இருப்பை, வியாபஹத்தை புனிதத்தை, மேலாக வரலாற்றை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துவிட்டது. கடந்தகால இனவாதம் இன்று மதவாத மாகிவிட்டது.

No comments:

Post a Comment