![]() |
தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுன் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் நடித்த படம் ‘தடா’. ![]() இது பற்றி காஜல் அகர்வால் கூறிகையில்: தமிழில் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘மாற்றான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கில் நான் நடித்த படங்கள் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது. நாக சைதன்யாவுடன் நடித்த ‘தடா’ என்ற படம் ‘டைகர் விஷ்வா’ என்ற பெயரில் வெளிவருகின்றது. இப்படத்தை அஜெய் இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கின்றார். இதில் மற்றொரு நாயகியாக சமிக்ஷா நடித்துள்ளார். தாதாவிடம் ஹீரோ மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் கதாநாயகியின் அண்ணன் தாதாவிடம் வேலை செய்கிறார். அவர் எப்படி மீட்கப்படுகிறார் என்பது தான் கதை. இப்படத்தின் படப்பிடிப்பை மறக்க முடியாது. ஐதராபாத்தில் தெலங்கானா பிரச்னையால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. ஒரே படத்தில் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் கவர்ச்சிக்கு போட்டி இருக்கிறதா என்கிறார்கள். கதைக்கு தேவைப்படும்போது இரண்டுக்கு அதிகமான நடிகைகள் கூட நடித்திருக்கிறோம். கமர்ஷியல் படம் என்றால் கவர்ச்சி ஒரு அம்சமாகிவிடுகிறது. அதை தவிர்க்க முடியாது. இது எல்லா மொழி படங்களுக்கும் பொருந்துவதாகிவிட்டது என்றார். |
news
Sunday, April 29, 2012
படத்தில் கவர்ச்சியை தவிர்க்க முடியாது: காஜல் அகர்வால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment