news

Friday, April 27, 2012

எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை! அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியானார் சுஸ்மா சுவராஜ்!!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு 13வது அரசிலயமைப்புத் திருத்தம் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது குறித்து, இந்தியக் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக்குழுவிடம் 13வது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாலான அதிகாரங்களைப் பகிரும் பொறுப்பு தனக்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
இதனை சுஸ்மா சுவராஜ் கொழும்பிலும் பின்னர் புதுடெல்லயிலும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அப்படியான எந்த வாக்குறுதியும் சுஸ்மா சுவராஜுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கவில்லை என்று சிறிலங்கா அரச வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருந்தன.
இது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாடு குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர மறுக்கின்ற சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment