![]() |
சுவாமி நித்தியானந்தா தற்போது கர்நாடகாவில்
உள்ளார். இந்நிலையில் அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் நேற்று அவர் நிருபர்களை
சந்தித்தபோது ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நித்தியானந்தாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது நித்தியானந்தாவின் சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்ததகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாகக் கூறி, நிருபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சீடர்கள் தங்களையும் தாக்கியதாக நவநிர்மாண் சேனா தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர். நவநிர்மாண் சேனா தொண்டர்கள் மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்தியானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உட்பட நித்தியானந்தாவின் 17 சீடர்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ![]() |
news
Friday, June 8, 2012
அமெரிக்க பெண்ணை கற்பழித்தாரா நித்தியானந்தா? நிருபர்களின் கேள்வியால் ஆசிரமத்தில் தகராறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment