news

Friday, June 8, 2012

அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிக்கை சந்தித்துள்ளார். இதன்போது அவரது பாரியார் சிராந்தி ராஜபக்சவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு வத்திக்கானில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும் பாப்பரசருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.
ஏற்கனவே ஜனாதிபதி பாப்பரசரை சந்திக்கும் போது, மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் மீது இலங்கையில் காட்டப்படும் எதிர்ப்புணர்வு குறித்து பாப்பரசர் தமது கண்டனத்தை வெளியிடுவார் என்று சிரேஸ்ட தமிழ் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை  இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வத்திக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது.
அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக - பொருளாதார அபிவிருத்தி
குறித்தும், இன நல்லிணக்கம் குறித்தும், புனித பாப்ரசரால் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ள்ளது.
மேலும் இசந்திப்பின் போது வத்திக்கானின் சர்வதேச விவகாரங்களுக்கான Archbishop Dominique Mamberti  அவர்களும் கூடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் கத்தோலிக்க குருமார்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து இவ்வேளை இசந்திப்பின் போது
விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.
இருப்பினும் இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே கோரிக்கையொன்றினை விடுத்திருந்தார்.
இலங்கையின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும்,  கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர்  என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றதெனவும் தெரிவித்திருந்தார்.
- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)     
- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை  திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)  
- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)  
- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)
- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார்.  இவர் யாழ் புனித சம்பத்தரிசியார்  கல்லூரி முன்னை நாள் அதிபர்-  இவரை இலங்கை ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை  மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)
மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும்  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில்,
2009ல் இலங்கை இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக  கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும்ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல  உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் மற்றுமொரு இலங்கையின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார்.
இலங்கையில் மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார்  மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த  தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

No comments:

Post a Comment