news

Sunday, June 10, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரம்: விஜயகாந்தை கலாய்த்த 10 வயது சிறுவன்


தமிழ்நாட்டில் புதுகோட்டை இடைத்தேர்தலுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தேமுதிக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜாகிர் உசேனை ஆதரித்து, புதுக்கோட்டை நகர் பகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் பால், பேருந்து விலைகள் அதிகரித்து விட்டன. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மின்வெட்டும் அதிகரித்துள்ளது. மக்களே, குடிநீர் ஒழுங்காக கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது, “ சரியான கேள்வி, அப்படித்தான் கேட்க வேண்டும். அப்படியே கேளு என்று ஒரு சிறுவனின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது. இந்த குரலைக்கேட்ட விஜயகாந்த், சற்று நிமிடம் பேச்சை நிறுத்தி விட்டு சுற்றிப்பார்த்தார்.
அப்போது ஓட்டின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் ஒருவன், சரியாத்தான் பேசுறீங்க, சரியாத்தான் கேக்குறீங்க, என அசராமல் கூற, அவனை புன்முறுவலோடு பார்த்தார் விஜயகாந்த்.
குடிபோதையில் விஜயகாந்த் அசிங்கமாக பேசுகிறார், வேட்பாளரை உதைக்கிறார் என்ற பலகுற்றச்சாட்டுகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் வந்தது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, விஜயகாந்த் பேச்சை கவனித்து அவரை பாராட்டிய சிறுவனால் அவர் இழந்த நல்லபெயர் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment