news

Sunday, June 10, 2012

இராணுவ ஆக்கிரமிப்பினைக் கண்டித்து இம்மாத இறுதியில் சாத்வீகப் போராட்டம்! சிறிதரன் எம்.பி

இராணுவ ஆக்கிரமிப்பனைக் கண்டித்து இம்மாத இறுதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சாத்வீகப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உதயன் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அவர்களது நிலங்களையும், வீடுகளையும் இலங்கை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்து நடப்பு மாதமான யூன் இறுதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சாத்வீகப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
2009ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி யுத்தத்தை ஏற்படுத்தி வந்த அரசாங்கம் தற்போது யுத்த முடிவின் பின்னர் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது.
அதனடிப்படையில் முறிகண்டியில் மக்களுக்குச் சொந்தமான நாலாயிரம் ஏக்கர் காணியில் சிங்களக் குடியேற்றத்தினை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளையில் எமது மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் அகதி முகாம்களின் வாழ்ந்து வருகின்றனர்.
இவற்றுடன் மேலும் பல  இலங்கை அரசின் அடாவடியான செயற்பாடுகளைக் கண்டித்தே எமது அமைதிப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறிதரன் எம்.பி. உதயனுக்குத் தெரிவித்தவை குரல் வடிவில்.....

இலங்கை படையினரின் கோரமுகம்: மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்

இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.
அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.

Saturday, June 9, 2012

அம்மா சாகனும் -இரு பெண் பிள்ளைகள் போட்ட குண்டு


அரவிந்தசாமி போல மாப்பிளையும் ஐஸ்வர்யாராய் போல பொண்ணுகேட்ட வங்களுக்கும் ஓர் எச்சரிக்கை

நீங்கள் பெண்களாக இருந்து ஒல்லியான மாப்பிளையையும், ஆண்களாக இருந்தால் ஒல்லி பெம்பிளையையும் தேடுகின்றீர்களா?
ஒல்லியை நம்பாதீங்க. உடனேயே குண்டாகிடுவாங்க. உலக அழகி ஐஸ்வர்யாவைப் போல பெண் வேணும் என காத்திருக்கும் ஆண்களும் அழகு நாயகன் அரவிந்தசாமியைப் போல ஆம்பிளை வேணும் என காத்திருக்கும் பெண்களும் இந்தப் படங்களை பார்த்துட்டு முடிவு எடுங்கோப்பா.
ஒல்லி மாப்பிளையும், ஒல்லி பெம்பிளையையும் நம்பவே கூடாது.
 
-

இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த விமானம்:





சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.

ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக, வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால் நம்பமுடியுமா ? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா, ஈரான், இராக், பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.

அமெரிக்காவின் இவ்விமானம், விண்ணில் ஆராட்சி என்ற பெயரில் ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் முற்றாக ரிமோட்டில் இயங்கக்கூடிய இவ்விமானம் சுமார் 29 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. பல நாடுகளின் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு இவ்விமானம் விரைவில் தரையிறங்கவுள்ளது. குறிப்பாக பூமியில் உள்ள ஏனைய நாடுகளை வேவுபார்ப்பது என்பது அமெரிக்காவுக்கு கடுமையான விடையம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேல் அமெரிக்க உளவு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியாது. அந் நாடுகளின் ராடர்களில் மண்ணைத்தூவவேண்டி இருக்கும். ஆனால் பூமியில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில்(விண்வெளியில்) இருந்தவாறே இந்த வேவு விமானம் தான் சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, June 8, 2012

இலங்கைக்கு எந்த அவசர நிலையிலும் உதவ சீன இராணுவம் தயார்


 இலங்கைக்கு எந்தவொரு அவசர நிலையிலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஆறு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார்.
அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.
பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இராணுவத் தளபதி ஒருவர் சீன பாதுகாப்பு அமைச்சரைத் தனியாகச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்பில் சீன இராணுவத் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியன் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சீனாவின் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியனுடன் நடத்திய தனியான சந்திப்பின்போது, சீன இராணுவத்துக்கு போருக்கு பிந்திய விடயங்கள் குறித்து பயற்சியளிக்கத் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
சீனா சரியான நேரத்தில் வழங்கிய இராணுவ உதவிகளும் பயிற்சியும் இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியுடன் 11வது டிவிசன் தளபதி பிரிகேடியர் குணவர்த்தன, இராணுவ அகடமியின் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் சீனா சென்றுள்ளனர்.

அமெரிக்க பெண்ணை கற்பழித்தாரா நித்தியானந்தா? நிருபர்களின் கேள்வியால் ஆசிரமத்தில் தகராறு


டி.வி நிருபர்களை தாக்கியதாக சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவாமி நித்தியானந்தா தற்போது கர்நாடகாவில் உள்ளார். இந்நிலையில் அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் நேற்று அவர் நிருபர்களை சந்தித்தபோது ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.
நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நித்தியானந்தாவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அப்போது நித்தியானந்தாவின் சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்ததகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாகக் கூறி, நிருபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சீடர்கள் தங்களையும் தாக்கியதாக நவநிர்மாண் சேனா தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர்.
நவநிர்மாண் சேனா தொண்டர்கள் மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்தியானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்‌ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உட்பட நித்தியானந்தாவின் 17 சீடர்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிக்கை சந்தித்துள்ளார். இதன்போது அவரது பாரியார் சிராந்தி ராஜபக்சவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு வத்திக்கானில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும் பாப்பரசருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.
ஏற்கனவே ஜனாதிபதி பாப்பரசரை சந்திக்கும் போது, மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் மீது இலங்கையில் காட்டப்படும் எதிர்ப்புணர்வு குறித்து பாப்பரசர் தமது கண்டனத்தை வெளியிடுவார் என்று சிரேஸ்ட தமிழ் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை  இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வத்திக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது.
அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக - பொருளாதார அபிவிருத்தி
குறித்தும், இன நல்லிணக்கம் குறித்தும், புனித பாப்ரசரால் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ள்ளது.
மேலும் இசந்திப்பின் போது வத்திக்கானின் சர்வதேச விவகாரங்களுக்கான Archbishop Dominique Mamberti  அவர்களும் கூடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் கத்தோலிக்க குருமார்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து இவ்வேளை இசந்திப்பின் போது
விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.
இருப்பினும் இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே கோரிக்கையொன்றினை விடுத்திருந்தார்.
இலங்கையின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும்,  கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர்  என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றதெனவும் தெரிவித்திருந்தார்.
- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)     
- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை  திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)  
- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)  
- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)
- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார்.  இவர் யாழ் புனித சம்பத்தரிசியார்  கல்லூரி முன்னை நாள் அதிபர்-  இவரை இலங்கை ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை  மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)
மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும்  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில்,
2009ல் இலங்கை இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக  கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும்ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல  உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் மற்றுமொரு இலங்கையின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார்.
இலங்கையில் மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார்  மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த  தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

தமிழினத்தின் மீதான இலங்கையின் போர்க்குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள்

 
தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்' ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் இயங்கி வரும் சிறிலங்காவின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித் தனமான  குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள்  நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுவதோடு, இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(2).png
http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(5).png

http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(1).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(6).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(7).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(8).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(9).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(3).pnghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(4).png
 http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam108.06.2012%20(1).jpg
 http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(1).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(2).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(3).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(4).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(5).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(6).jpghttp://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poorkuththam08.06.2012%20(7).jpg

பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதை! காணொளி வெளியானதால் பெற்றோர் கொதிப்பு!



பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர், மாணவிகள் இருபது பேரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பகிடிவதை போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காணொளிக் காட்சிகள் சீஐடி மற்றும் ஊடகங்களுக்குச் சென்றது எப்படி? என்பது குறித்த மாணவர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காணொளி பிரசித்தமானதால் பெற்றோர்களும் இது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்புவதாக உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு உள்ளான புதிய மாணவர், மாணவிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.