news

Wednesday, July 4, 2012

ஐ.நா பொதுச்செயளாரும் சிறிலங்காவுக்கு கண்டனம்

சிறிலங்காவில் சிறிலங்கா மிரர் மற்றும் சிறிலங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இணையத்தளங்களின் மீதான நடவடிக்கை மற்றும் ஒன்பது ஊடகவியலாளர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் இணையத்தள பணியகங்கள் மீதான நடவடிக்கை குறித்து ஐ.நா அறிந்துள்ளது.
எந்தத் தலையீடுகளும் இன்றி ஊடகவியலாளர்கள் பணியாற்றக் கூடிய நிலை இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கு மட்டுமன்றி, ஏனைய நாடுகளுக்கும் பல சந்தர்ப்பங்களில் நாம் கூறியுள்ளோம்.
அந்தப் பொதுவான கோட்பாடு இந்த விவகாரத்திலும கூடப் பொருத்தமானது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இணையத்தளங்கள் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்காவும், ஐரோய்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment