news

Saturday, May 12, 2012

பெண்ணின் கன்னித் தன்மையை காருக்குள் வைத்து பரிசோதித்த காவல்துறை!

இது துபாயில் நடந்த ஒரு கொடுமையான உண்மைச் சம்பவம்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரை போல் நடித்த நபர் ஒருவர் காருக்குள் வைத்து இளம் யுவதியை கற்பழித்தமை தொடர்பான வழக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர் உள்நாட்டுக்காரர். வயது 31. குற்றப் புலனாய்வுப் பொலிஸாரை போல் நடித்து பிலிப்பைன்ஸ் நாட்டவரான 27 வயது யுவதியை மிரட்டி காரில் அழைத்துச் சென்று செக்ஸ் வைத்து இருக்கின்றார்.
யுவதி எழுதுவினைஞராக வேலை பார்ப்பவர். கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது. யுவதி ஒழுங்கான முறையில் ஆடைகள் அணிந்து இருக்கவில்லை என்றும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விடுவார் என்றும் வதிவிட கட்டிட தொகுதிக்கு அருகில் வழி மறித்து இவர் மிரட்டி இருக்கின்றார். யுவதி பயந்து விட்டார். பின் பொலிஸ் நிலையத்துக்கு என்று சொல்லி மாலை நேரம் வந்து யுவதியை காரில் கொண்டு போய் இருக்கின்றார் ஆசாமி.
கார்த் தரிப்பிடம் ஒன்றின் ஊடாக கார் பயணித்தது. யுவதியிடம் தன்னினச் சேர்க்கையாளரா? கன்னி கழிந்தவரா? என்றெல்லாம் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்டு இருக்கின்றார். இவர் பொலிஸ் நிலையத்துக்கு யுவதியை கொண்டு செல்லவில்லை. கார்த் தரிப்பிடத்தின் மிக இருண்ட பகுதியை வந்தடைந்தார்.
விபரம் கேட்டபோது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்கின்ற பட்சத்தில் யுவதியை நாடு கடத்தி விடுவார் என்றும் பல பிரச்சினைகளை யுவதிக்கு ஏற்படுத்துவார் என்றும் சொல்லி இருக்கின்றார். யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டு போய் கன்னித் தன்மையை சோதிப்பார் என்றும் கன்னி கழிந்தவராக இருக்கின்ற பட்சத்தில் நாடு கடத்தி விடுவார் என்றும் மிரட்டி இருக்கின்றார்.
யுவதி அச்சத்தின் உச்சத்துக்கு போய் விட்டார். அழ தொடங்கி விட்டார். விட்டு விட சொல்லி இரந்து கெஞ்சினார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் கன்னித் தன்மையை பரிசோதிக்கப் போகின்றார் என்று ஆசாமி சொல்லி இருக்கின்றார். காரின் பின் ஆசனத்துக்கு செல்ல சொல்லி கேட்டு இருக்கின்றார். யுவதியும் முன் ஆசனத்தில் இருந்து குதித்து பின் ஆசனத்தில் அமர்ந்தார்.
யுவதியின் ஆடைகளை களைய சொல்லி கேட்டு இருக்கின்றார். ஆசாமியும் சுயம் ஆடைகளை களைந்து கொண்டார். யுவதியுடன் செக்ஸ் வைத்தார். எல்லாம் முடிந்த பின் யுவதியை கொண்டு வந்து கட்டிட தொகுதிக்கு அருகில் சேர்த்தார். ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.
யுவதி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நெருங்கிய நண்பி ஒருத்தி திருப்ப திருப்ப வற்புறுத்தி கேட்டபோது கற்பழிக்கப்பட்டமையை வைகறை பொழுதில் சொல்லி இருக்கின்றார். தொடர்ந்து இருவரும் காலையில் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டனர்.
இது தொடர்பான வழக்கில் யுவதியின் சாட்சியத்தை தொடர்ந்து யுவதிக்கு ஆதரவாக மேற்சொன்ன நண்பியும் வாக்குமூலம் வழங்கினர். அடையாள அணிவகுப்பில் இருவராலும் ஆசாமி சரியாக அடையாளம் காண்பிக்கப்பட்டார்.
நீதிமன்றம் இவ்வழக்கை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உள்ளது.

முஸ்லிம்களை மீள்குடியேற்றாவிடில் புலிகளின் அநியாயங்களை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்க கோருவேன் : அமைச்சர் ரிசாத்


தம்புள்ள பிக்கு மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டது போல் மன்னார் ஆயரும் நடந்துகொள்வதாகக் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தம்புள்ளயில் ஒரு பிக்கு, மனிதன் செய்ய முடியாத வகையிலான மிகவும் கேவலமான வேலைகளை செய்தார். அவர் நேரில் சென்று பள்ளிவாசலை உடைத்தார். மிரட்டல்களை விடுத்தார்.
அதேபோன்று இப்போது மன்னார் ஆயரும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாமென பிரசாரம் செய்து வருகின்றார். முஸ்லிம்களுக்க யாரும் காணிகளை விற்றால் அவர்களை அடிப்பேன் என்றும் ஆயர் கூறி வருகின்றார்.
அத்துடன் மன்னாரில் காடுகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதியை ஜனாதிபதி என்னிடம் தந்துள்ளார்.
நான் யாருடைய காணியையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் மீள்குடியேற்றவே முயற்சிக்கின்றேன். என் உயிரைக் கொடுத்தாவது அவர்களை அந்த இடங்களில் மீள்குடியேற்றியே தீருவேன்.
முஸ்லிம்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னின்று செயற்பட வேண்டும். ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் இன்று புத்தளத்தில் தங்கியுள்ளனர்.
இவர்களை மீள்குடியேற்ற அனுமதிக்காது விட்டால், 20 இலட்சம் முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி புலிகளின் அநியாயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவேன்.
தமிழர்களின் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அவர்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் தீர்வுகள் வேண்டும். தமிழரின் பிரச்சினை தொடர்பில் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முஸ்லிம்கள் தொடர்பில் பேசத் தயாராயில்லை. இது பெரும் அநீதியானது’ என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யாழ். மே நாள் பேரணியில் புலிக்கொடி ஏந்தியவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரே!– சுரேஸ் எம்.பி.


யாழ்ப்பாண மே நாள் பேரணியில் விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் சிங்கள இனத்தைக் கேலி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்திடம் கூறியது.
இப்போது விடுதலைப் புலிகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசாங்கமே அறிவித்தது.
போரின் பின்னர் ஆயிரக்கணக்கான புலிகள் கைது செய்யப்பட்டனர்.
இப்போது இலங்கை அரசாங்கம் வேறு எதையோ சொல்கிறது.
இது சிங்கள இனத்தைக் கேலி செய்யும் செயல்.
பேரணியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் இருப்பவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பணியகத்தில் இருந்து வெளியே வந்து, பேரணி அந்த வீதியால் சென்று கொண்டிருந்த போது புலிக்கொடியைக் காண்பித்தபடியே சென்றிருக்கிறார்.
இது இலங்கை அரசினாலும் இலங்கை அரச  படையினராலும் அரங்கேற்றப்பட்ட அவசியமற்றதொரு நாடகம்.
இலங்கை  இராணுவம் இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.
இலங்கை  காவல்துறை குறிப்பிட்ட சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
வடக்கிலுள்ள பொதுமக்கள் எவரும் புலிக்கொடியை வைத்திருக்கவோ கொண்டு செல்லவோ இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Saturday, May 5, 2012

தமன்னா, அனுஷ்கா பீரில் போதைக்குளியல் அதிர்ச்சித் தகவல் (படங்கள்)


நடிகர் ,நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு �நமஸ்தே� போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். (இப்படியெல்லாம் நமக்கு தோணலையே என்றுதான்)

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

ஒசாமா உடலைத் தேடி அலையும் அமெரிக்க ஆய்வாளர் பில் வாரன்

அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன்(54) கடந்த ஆண்டு மே மாதம் 2ம் திகதி, அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் பலியானார். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப்பின், ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிபுணரான வாரன், ஒசாமா பின் லாடன் கொலை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட சில புகைப்படங்களில் இருந்து ஒசாமாவின் உடலை எங்கு வீசியிருப்பார்கள் என தான் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மேற்கே அரபிக்கடலில் 320 கி.மீ., தூரத்தில் ஒசாமாவின் உடல் அடங்கிய பை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வாரன், வரும் ஜூன் 1ம் திகதி முதல் இதற்கான பணியை தான் துவங்கவுள்ளதாகவும், இதற்கு ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். ஒசாமாவின் உடலை தேடும் பணிக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட உள்ளதாகவும் வாரன் கூறியுள்ளார்.
தேசப்பற்று மிக்க அமெரிக்கரான தன் போன்றோருக்கு, ஒசாமா இறந்ததற்கான ஆதாரத்தை அளிக்க ஒபாமா நிர்வாகம் தவறிவிட்டதாக வாரன் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அஜர்பைஜானில் இருந்த தனது பணிகளை கவனித்து வரும் வாரன், ஒசாமா உடல் தேடும் பணிக்காக ரஷ்யாவிலிருந்து அகழ்வாராய்ச்சி கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ளார்.
மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னை கொல்லவும், படகை மூழ்கடிக்கவும் அமெரிக்க ராணுவம் முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ள வாரன், தனது முயற்சியின் போது பின் லாடனின் உடலை வெளிக்கொண்டு வரப்போவதில்லை எனவும், தனது ஆய்வை முழுவதும் வீடியோ எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும், டி.என்.ஏ. டெஸ்ட் எடுப்பதற்காக பின் லாடனின் உடல் பாகங்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக வாரன் தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் இரு பெண்களை திருமணம் செய்த ஈராக் வாலிபர்

ஈராக் நாட்டைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் நயீப் அல் ஒவைதி என்ற 22 வயது இளைஞர் ஒரே ஒரவில் தமது 2 காதலிகளை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
ஈராக்கின் திக்ரிக் அருகே உள்ள அல் லக்லக் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். விவசாயியான இவர் இந்தார், சவூத் ஆகிய இரு பெண்களைக் காதலித்து வந்தார். இருவரும் அப்துல் ரஹ்மானுக்கு உறவினர்கள்தான்.
இருவரையும் காதலித்த அவர் இருவரையும் மணக்கவும் முடிவு செய்தார். ஆனால் உறவினர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத ரஹ்மான், தனது இரு காதலிகளின் ஒப்புதலையும் பெற்றார். பின்னர் இருவரையும் மணக்கப் போவதாக அறிவித்தார். இரு பெண்களும் ஒப்புக் கொண்டு விட்டதால் உறவினர்களும் சரி என்று கூறி விட்டனர்.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நாளில் இருவரையும் கரம்பிடித்தார் ரஹ்மான். இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியனர்.
ஆனால் தமது காதலிகள் இருவரையும் சமமாக நடத்துவேன் என்று ரஹ்மான் உத்தரவாதம் கொடுத்ததால் இரு பெண்களின் ஒப்புதலுடனேயே திருமணம் செய்வதாகவும் ரஹ்மான் கூற ஒருவழியாக சமாதானம் அடைந்திருக்கின்றனர்.
இந்தக் கல்யாணத்தின்போது இரு காதலிகளுக்கும் தலா 2140 டொலர் வரதட்சணைப் பணமாக கொடுத்துள்ளார் ரஹ்மான்.

Friday, May 4, 2012

யாழில் இராணுவ வீரர்கள் இடையே மோதல் ஸ்தலத்தில் இருவர் பலி

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  பலியாகியுள்ளனர்.
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு இராணுவ வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனது சக இராணுவ வீரர் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/3x2LMYR0bxU" frameborder="0" allowfullscreen></iframe>

ஜோர்ஜியா Salpa 100 கவர்ச்சியான பெண்கள்




உப்புவெளியில் விபச்சார விடுதி முற்றுகை: பெண் உட்பட நால்வர் கைது !


திருகோணமலை - உப்புவெளி - அலஸ்வத்தை - தொரன்காடு சந்தி பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. உப்புவெலி பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. முற்றுகையின் போது மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் 2ம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 80,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு, பால் மாவின் விலை உயர்வு! சீமேந்தின் விலையும் அதிகரிப்பு


சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான விலைகளை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கான இறக்குமதி வரியை நேற்று அரசாங்கம் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 163 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயுவிற்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீமெந்தின் விலை 70ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் சீமெந்து 50 கிலோ மூடை ஒன்றின் விலை 70ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளது.