news

Wednesday, May 23, 2012

யாழ்.பல்கலை. மாணவர்களை இராணுவத் தளபதியுடன் தனியாக சந்திக்க நிர்வாகம் அழைப்பு: மாணவர்கள் மறுப்பு


யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை இராணுவ கட்டளை தளபதி ஹத்துருசிங்கவுடன் தனியான சந்திப்பொன்றை நடாத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் மாணவர் பிரதிநிதிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக மாணவர் தர்சானந்த் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை காலவரையாற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து, யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஹத்துருசிங்கவுடன் தனியாக ஒரு சந்திப்பில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தது.
எனினும், மாணவர் பிரதிநிதிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலும், எந்தவிதமான சந்திப்புக்கள் ஏற்பாடு செய்வது என்றாலும் பகிரங்கமான இடமொன்றில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்பாடு செய்து தரப்படும் கூட்டத்தில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனிமையில் சந்திப்பதால் மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பாதிப்பதுடன் மாணவர்களின் முகங்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் மாணவர்கள் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

புலிகளின் ஆயுதங்களை தேடி வடமராட்சியில் படையினர் பாரிய தேடுதல் வேட்டை


யாழ். வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடும் வேட்டையில் சிறிலங்காவின் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியாக இரவு பகலாக இராணுவத்தினது பொறியியல் பிரிவும் விசேட தேடுதல் குழுவும் இணைந்து இவ்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இத்தேடுதல் காரணமாக பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு பற்றைக் காணிகள் பாவனையற்ற பகுதிகளில் இராணுவத்தினர் நிலத்தையும் தோண்டி தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரையில் எந்தவிதமான வெடிபொருட்களையும் படையினர் மீட்காத போதும் தொடர்ச்சியாக அப்பகுதியில் தேடுதல் நடடிவக்கைகளில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
படையினரது இந்த நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 22, 2012

உள்ளாடைகளுடன் குளு குளு சமீரா ரெட்டி (காணோளி இணைப்பு)


 
  
தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமாகிய சமீரா ரெட்டி தொடர்ந்து பல முன்னணி நாயகர்களுடனும் நடித்தார்.

இவர் அண்மையில் உள்ளாடைகளுடன் குளு குளு எனத் தோன்றி புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்துள்ளார். VIDEO



(காணோளி இணைப்பு) 

ரஞ்சிதாவுக்கு �களங்கம்� ஏற்படுத்திய ஜெயேந்திரர், எழும்பூர் வரக் கடவது !



நித்தியானந்தாவுடன் தம்மை தொடர்புபடுத்தி அவதூறு தெரிவித்ததாக நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்குக்காக காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் (புதன்கிழமை) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. ஜெயேந்திரரின் கூற்றால், ரஞ்சிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக, அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது. காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், �நடிகை மற்றும் சிஷ்யையான ரஞ்சிதாவை நித்தியானந்தா எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டு சுற்றுகிறார்� என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மனுவில் உள்ளவை கோர்ட்டுகளில் உபயோகிக்கப்படும் மொழி நடையில் உள்ளதால், அதன் சாராம்சத்தை மட்டும் எமது தமிழில் அர்த்தம் மாறாமல் இதோ, கொடுக்கிறோம். படித்துப் பாருங்கள்:

ரஞ்சிதா அம்மையார் தாக்கல் செய்த மனுவின்படி, தம்மை நித்தியானந்தா அருகில் வைத்திருப்பது, பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. இதுவரை ரஞ்சிதா அம்மையார் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயர், ஒரு நொடியில் அதல பாதாளத்தில் சரிந்து வீழ்ந்தது. சமுதாயத்தில் அதி உன்னத நற்பெயருடன் வாழ்ந்துவரும் ரஞ்சிதாவின் பெயருக்கு, ஜெயேந்திரரின் கூற்று தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. வெளியே தலைகாட்ட முடியவில்லை.

நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டுள்ளதை தவிர வேறு ஏதுமறியாத அபலைப் பெண்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஜெயேந்திரர் பேசியுள்ளார். இந்தப் பேச்சு, ரஞ்சிதா போன்று சமுதாயத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவரும் ஒருவருக்கு எந்தளவு மனக் கிலேசத்தை ஏற்படுத்தும் என்பதற்கு புறநாநூற்றில்கூட உதாரணம் கிடையாது. அப்பாவிப் பெண் ஒருவரை, இடியோசை கேட்ட நாகத்தைப் போன்று மிரள வைக்கும் வார்த்தைகளை கூறிய ஜெயேந்திரரின் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுவே ரஞ்சிதாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் சாராம்சம்.

அநீதி கண்டு பொங்கியெழும் புதுமைப் பெண் ரஞ்சிதா, புகார் கொடுத்ததுடன் புகுந்த வீட்டில் முடங்கிக் கொள்ளவில்லை. ஜான்சி ராணியின் கம்பீரத்துடன் எழும்பூர் நீதிமன்றத்துக்கு கையில் பைலுடன் வந்தார். கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு தமக்கு ஜெயேந்திரர் ஏற்படுத்தி விட்ட களங்கம் பற்றி எடுத்துரைத்தார். இதையடுத்து ஜெயேந்திரர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவின் தற்போதைய குருவான மதுரை மூத்த ஆதீனம், �எந்த வழக்குக்கும் இளைய ஆதீனம் கோர்ட்டுக்கு வர மாட்டார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவர் கோர்ட் ஏறும் வழக்கம் கிடையாது� என்று கூறியிருந்தார்.

மதுரை ஆதீனத்துக்கு உள்ள அந்த ப்ரிவிலேஜ், காஞ்சி சங்கரமடத்துக்கு பொருந்தாது போலிருக்கிறது !

வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று (22.5.2012) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தாயகத்தில் சந்தித்தனர். யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன என அதிர்வு இணையம் அறிகிறது.

�தாய்த்தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது� என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.

வைகோ கூறியதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ தேசம்தான் நமது இலக்கு. ஆனால், சிங்கள இனவாத அரசு, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கொடுவாளாகப் பயன்படுத்தி, இலங்கைத் தீவில் சுதந்திர ஈழக் குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளை நசுக்கவும், நாசமாக்கவும் திட்டமிட்டு உள்ளதால், தீவில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் வெளிப்படையாகத் தனி ஈழக் குரல் கொடுக்க முடியாத தற்போதைய நிலையை, நன்கு அறிவோம்.

ஈழத்தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தையே மீண்டும் கேட்கின்றனர். இறையாண்மை உள்ள சுதந்திர தேசமாக அரசோச்சி வாழ்ந்த தங்கள் தாயகம், சிங்களவரின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடப்பதால், அந்த விலங்குகளை உடைத்து, அந்நியர் ஆக்கிரமிப்பை அகற்றி, இழந்த சுதந்திரத்தை மீண்டும் அடைவதற்கான, ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, அனைத்து உலக நாடுகள் நிராகரிக்கவோ, உதாசீனம் செய்யவோ முடியாது. தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களரை வெளியேற்றவும், சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்தவும், அதில் அனைத்து உலக நாடுகளில் ஆங்காங்கு வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுமான கோரிக்கையை, அனைத்து உலக மக்கள் நீதியும் நியாயமுமாகக் கருதி ஏற்கவே செய்வார்கள்.

அதுவே ஈழத்தமிழர்களின் இலக்கு; தாய்த் தமிழகத்தின் இலக்கு; தரணி வாழ் தமிழர்களின் இலக்கு. அந்த இலக்கினை உறுதியாக அடைவோம். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்ந்திடச் செய்வோம்� என்று வைகோ கூறினார்.

 மகளை அடித்தே கொன்ற பெற்றோர்: தங்கச்சி நீதிமன்றில் சாட்சி சொன்னார் !


மேலைத்தேய கலாச்சரங்களுக்கு ஆளாகிய குற்றத்துக்காக, 17 வயது ஷகீலா என்னும் பெண்ணை அவரது தாய் தந்தையர் கொலைசெய்துள்ளனர். மேற்படி ஷகீலா என்னும் இப் பெண்ணை இவர்கள் ஒரு மாப்பிள்ளைக்கு கட்டாயக் கல்யாணம் செய்துவைக்க முயன்றுள்ளனர். இதனை அவர் மறுக்கவே, பெற்றோர் ஷகீலாவின் கழுத்தில் பொலித்தீன் பையால் மூடி அவரைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இக் கொலையை அவர் தங்கை நேரில் பார்த்துள்ளார். இருப்பினும் இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று, பெற்றோர் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். இருப்பினும் அவர், பொறுக்கமுடியாமல் ஒரு நாள் பொலிசாரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டார்.

ஷகீலாவின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 7 வருடங்கள் கழித்தே ஷகீலாவின் தங்கை தனது பெற்றோர் இழைத்த கொடுமையை நீதிமன்றில் சொல்ல சம்மதித்துள்ளார். இருப்பினும் பெற்றோர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில் ஷகீலாவின் தங்கை, தான் நேரில் கண்டதை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றொருக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்


யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள் அதிர்ச்சியில் தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவவே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கடந்த வருடம் ஜீன் மாதம் 8ம் திகதி இம்மாணவன் முஸ்லீம் ஒருவரால் ஆசை வார்த்தை கூறி துவிச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்த வான் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை யாழ்.ஜந்து சந்திப்பகுதிக்கு கொண்டு வந்து அன்றிரவு அவனை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு  அவனுக்கு சுண்ணத்து பண்ணப்பட்டு தொடர்ந்து அன்வர் என பெயர் மாற்றப்பட்டு வீடென்றில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுமியர்களை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான்.
இதன் பின்னர் இச்சிறுவன் யாழ்ப்பாணத்திற்கு இவ்வருடம் கொண்டு வரப்பட்டு நடைபாதை கடையென்றில் வியாபாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வியபாராம் செய்து கொண்டிருக்கும்போது கடந்த 17ம் திகதி இவரை இனங்கண்டு சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் தாயாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் தனது மகனை இனங்கண்ட தாயாரைக்கண்ட மகன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்க்ள என கண்ணீர்; சிந்தி கதறி அழுதுள்ளார். ஏனெனில் தான்  எங்கிருக்கின்றேன் என்பதே அவனுக்கு தெரியவில்லை
இதன்போது உடனடியாகவே தாயார் சுதாhகரித்துச் செயற்பட்டு ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறையிட்டிருந்ததால் பொலிஸாரிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரு வர்த்தகர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவனை மருத்துவபரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஜந்து சந்தியிலிருந்த வீடென்றலிருந்து சிறுவன் கடைசியாக காணாமல் போன அன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை புத்தகபை என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை சிறுவன் இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்பதோடு சிறுவனை வேலைக்கு அமர்த்திய நடைபாதை வியாபாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் குறித்த சிறுவனை பொலிஸார் விலங்கிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததை கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொலிஸாரின் ஒரு பக்க சார்பான இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் தாயார் ஏற்கனே மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றில் முறையிட்டிருந்ததால் அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரை வற்புறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம்கள் மேற்கொண்ட இக்கடத்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு எரிச்சலையும் தோற்றுவித்துள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் கற்பழித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது

முள்ளிவாய்க்கால் பகுதியில் புத்த விகாரை இரகசியமான முறையில் அமைத்து திறக்கப்பட்டது!


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற 3 வருட நிறைவு அண்மையில் நினைவு கூரப்பட்ட வேளையில் அதற்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாரிய இனப்படுகொலை இடம்பெற்ற இந்தப் பகுதிக்குள் தமிழர்கள் எவரும் வசிப்பதற்கோ செல்வதற்கோ அனுமதிக்கப்படாத அதேவேளையில், மிகவும் இரகசியமான முறையில் இங்கு புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவின் கரையோரமான கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்காலை இணைக்கும் கரையோரப் பாதை சீனாவின் ஆதரவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாதை திறக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே முள்ளிவாய்க்காலுக்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இந்த புத்த விகாரை திறக்கப்பட்டுள்ளது.

ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது:-விடுதலைப் புலிகள்


எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும்.
உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும்.
இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
அன்பான தமிழ் மக்களே,
இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின் மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.
தென்தமிழீழத்தில் வெளிப்படையாகத் தொடங்கிய போர் தமிழரின் பூர்வீக நிலங்களெங்கும் விரிந்தது. சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புக்கள் விரிவடைந்து தமிழரின் நிலங்களை கையகப்படுத்தியது.
எமது மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடி ஆயிரமாயிரமாக இடம்பெயர்ந்தார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்திற் கொள்ளாது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசின் கொடிய போரைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் சரிவரச் செயற்படவில்லை.
மாறாக சிலநாடுகள் தமிழ்மக்களுக்கெதிரான கொடிய இனவழிப்புப் போருக்குப் பக்கபலமாக நின்றன. எமது மக்கள் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று நீதிகேட்டு நடாத்திய போராட்டங்களைக் கண்டுகொள்ளாது இனவழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் அப்போது நீதியின் வழியில் நடக்கவில்லை.
தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைத் தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.
இறுதியில் நவீன மானுடவரலாறு கண்டிராத மாபெரும் அழிவொன்றை முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தி ஓய்ந்தது.
தாயகத்தில் சிங்கள இனவாத அரசின் கொடூரமான போர் முடிந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா மீது சிறிதளவேனும் அழுத்தமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது.
உலக நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு மூர்க்கத்தனமாக தமிழ்மக்கள் மீது தனது போரைத் திணித்திருந்தது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தமிழ்மக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கத் தவறியுள்ளது எனவும் பன்னாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்கமாகவே தமது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நடந்துமுடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா அரசுமீது அழுத்தத்தைக் கொடுக்க முற்படும் இச்செயற்பாடு கொடிய இனவழிப்பை எதிர்கொண்டு நிற்கும் எமது தமிழினத்துக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது.
எனினும் தமிழ்மக்கள் வேண்டி நிற்கும் விடுதலையும் உரிமைகளும் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு தமிழர்களுக்குப் பாதகமான பல அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இனவழிப்பை நிகழ்த்தியவர்களே நடாத்திய கண்துடைப்பு விசாரணை அறிக்கையை முதன்மைப்படுத்தி அதன்வழியே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறையை முன்மொழியும் இத்தீர்மானம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காது.
குறிப்பிட்ட விசாரணை அறிக்கையை தளத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பதையும் பன்னாட்டுச் சமூகம் நினைவிற்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசின் கட்டமைப்புக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையொன்றை தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வாகப் பரிந்துரைக்கும் இத்தீர்மானம் நடந்துமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் – இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். மேலும் பன்னாட்டுச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்கவில்லையென்றே கூறவேண்டும்.
1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நிகழ்ந்த இனவழிப்பு நடவடிக்கைகளின் பின்னால் அடுத்த ஆண்டு கூடிய ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை விவகார அமர்வில் சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானமொன்றை நிறைவேற்றினர்.
அது தமிழரின் நிரந்தர பாதுகாப்புப்பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ போதிய கரிசனை கொள்ளாமல் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறையை மையமாக வைத்தே இருந்தது.
அதன்பின்னர் இன்றுவரையான காலப்பகுதியில் இலட்சத்துக்குமதிகமான மக்களைப் படுகொலை செய்யவும், தமிழரின் பூர்வீக நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கவும், இலட்சக்கணக்கான தமிழ்மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றவுமே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை சிங்களப் பேரினவாதத்துக்கு உதவியுள்ளது.
இதைவிட தமிழர் தரப்புக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் என்பவற்றைப் பார்த்தால் அனைத்துமே சிங்களப் பேரினவாதத் தரப்பால் முறிக்கப்பட்டு தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும்.
சிறிலங்கா அரசுடன் நேரடியாக பேசிப்பயனில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்தே பன்னாட்டுச் சமூகம் 2002 ஆம் ஆண்டு எமக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் நிடுநிலையாளராகப் பணியாற்ற முன்வந்தது. அவ்வாறு பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில் எழுதப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைகூட சிறிலங்காத் தரப்பாலேயே ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டது.
உலகின் ஆலோசனைகளுடன்கூடிய உள்ளகப் பொறிமுறைகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் மிக இலாவகமாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தூக்கியெறிந்தமைக்கு சுனாமியின் பின்னரான பொதுக்கட்டமைப்பு வசதிக்கான பொறிமுறை (P-TOMS Post Tsunami Operational Management Structure) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இப்போது மீண்டும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைமூலமான தீர்வைநோக்கித் தமிழர்களைத் தள்ளுவதைப் பன்னாட்டுச் சமூகம் செய்யத் தொடங்கியுள்ளது.
தமிழ்மக்கள் பட்ட துன்பங்களையும், அவர்கள் சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் நன்கு தெரிந்துகொண்டும், அதைவிட தாமே சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட அனுபவங்களைக் கொண்டிருந்தும்கூட தொடர்ந்தும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை மூலமான தீர்வைத் தமிழ்மக்கள் மேல் திணிக்க முயல்வது எமது மக்களுக்கு விசனத்தையே ஏற்படுத்துகின்றது.
போர் ஓய்ந்ததாக அறிவித்து மூன்று ஆண்டுகளாகும் இந்நிலையில் தமிழர் நிலங்களில் படையினரின் செயற்பாடுகள் குறைக்கப்படவில்லை. நிலப்பறிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மக்களின் அன்றாட அசைவியக்கம் இன்றும் படைத்தரப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
பலவிடங்களில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை சிறிலங்காப் படைத்தரப்பே நடத்தி வருகின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தம்மை நம்பிய தமிழ் மக்களைக் கைவிட்டது போலவே இன்றும் எமது மக்களை பன்னாட்டுச் சமூகம் கைவிட்டுள்ளது என்றே உணர்கின்றனர்.
இந்நிலையில் விரைவானதும் நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வொன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே பன்னாட்டுச் சமூகம் உழைக்க வேண்டும்.
மாறாக முழுமையற்ற பொறிமுறைகளை முன்மொழிவதும் சிறிலங்கா அரசிடமே தமிழ் மக்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான தீர்வை வழங்கும் பொறுப்பையும் ஒப்படைப்பதும் திட்டமிட்ட இனவழிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசதரப்புக்கு காலஅவகாசத்தையும் பாதுகாப்பையும் கொடுப்பதாகவே அமையும்.
இதேவேளை, நடந்துமுடிந்த மனத உரிமை கூட்டத்தொடரில் தாயகத்தில் எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் கலந்துகொள்ளாது தவிர்த்தமையை நாம் வேதனையோடு பார்க்கின்றோம்.
தமது அரசியல் நலன்களுக்காக மட்டுமே செயற்படும் அரசுகளை விடவும், எமது அரசியற் சிக்கல் தொடர்பில் நியாயமாகச் செயற்படக்கூடிய பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ளும் ஓரிடத்தில் எமது தாயகத்து உண்மை நிலைமைகளை தாயகத்திலிருந்தே வந்து சொல்வதென்பது மிக முக்கியமான தாக்கத்தை வழங்கியிருக்கும்.
சிறிலங்கா அரசின் பொய்ப்பரப்புரைகளை மிக இலகுவாக முறியடிக்கக்கூடிய வாய்ப்பாகவும், அதேவேளை எதிர்காலத்தில் எமக்குச் சாதகமாக பல நிகழ்வுகள் நடக்க ஏதுவான நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் மக்களே!
மிக நீண்ட போராட்டத்தில் நாம் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கிறோம். அன்னியப் படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம்.
உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள், உணவின்றி, உறைவிடமின்றி, மருத்துவ உதவிகளின்றி அவலப்பட்டு மரித்தார்கள். இவ்வளவு அவலங்கள், தியாகங்களின் பின்னால் நாம் சோர்ந்து போகக்கூடாது.
எமக்கான நீதியையும் விடுதலையையும் பெறும்வரை நாம் ஓய்ந்துபோகக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நேரமிது.
பூகோள அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. தற்போதைய நிலையில் எமது போராட்டம் பன்னாட்டுச் சமூகத்தின் அதிகரித்த கவனத்தைப் பெற்றுள்ளது.
சில பன்னாட்டு ஊடகங்களினதும் தன்னார்வத் தொண்டர்களினதும் செயற்பாடுகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைவிட எமது மக்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்ந்தும் எமக்குச் சாதகமான மாற்றத்தை உலகில் ஏற்படுத்தி வருகின்றது.
எமது மக்கள் அமைப்புக்களாகவும் தனிப்பட்டவர்களாகவும் பன்னாட்டுச் சமூகத்தினர் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இச்செயற்பாடுகள் பன்னாட்டுச் சமூகத்தில் கணிசமானளவில் எமக்குச் சாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற போதுங்கூட சில குழப்பங்களையும் பன்னாட்டுச் சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.
அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு விடுக்கும் வேண்டுகோள் முரண்பட்டவைகளாக அமைவதும், ஒன்றையொன்று விமர்சிப்பதுமாக இருப்பதும் எமக்குப் பாதகமான விளைவுகளையே தந்துள்ளது. இந்த முரண்பட்ட தீர்வு வேண்டுகைகள் தொடர்பில் பல பன்னாட்டுச் சக்திகள் தமது கரிசனையை வெளியிட்டுமுள்ளன.
அன்பான மக்களே!
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும்.
உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும்.
பல்லாண்டுகளாக சிங்கள – பெளத்த பேரினவாதத்தால் நசுக்கப்பட்டு இனவழிப்பை எதிர்கொண்டிருக்கும் எமது இனம்,
கடந்த காலங்களில் அனைத்து வழிமுறைகளிலும் முயன்றும் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து குறைந்தபட்ச உரிமைகளைக்கூட பெறமுடியாமல் ஏமாற்றப்பட்ட வரலாற்றைக்கொண்ட எமது இனம்,
வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்து அதன்வழியே தனக்கான பாதுகாப்பையும் தனியரசுக் கட்டமைப்பையும் குறிப்பிட்ட காலம் பேணிய எமது இனம்,
சிறிலங்கா அரசில் எப்போதோ நம்பிக்கை விட்டுப்போய் பன்னாட்டுச் சமூகத்தை நடுநிலையாக வைத்து அரசியல்தீர்வை எட்ட நினைத்து அதிலும் ஏமாற்றப்பட்ட எமது இனம்,
மானுட வரலாற்றில் மிகக்கொடுமையான இனவழிப்பை எதிர்கொண்டுள்ள எமது இனம்,
தனக்கான நிரந்தரமான அரசியல்தீர்வாக முன்வைக்க வேண்டியது சிறிலங்கா என்ற அரச கட்டமைப்புக்குள் அல்லாமல் சுயாதீனமாகத் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையேதான்.
இதற்காகத்தான் பல்லாயிரக்கணக்கான எமது மாவீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். இந்த இலட்சியத்துக்காகத்தான் இலட்சக்கணக்கான எமது மக்கள் எமது போராட்டத்தில் தோளோடு தோள் நின்றார்கள்.
எனவே தனிப்பட்டவர்களும் அமைப்புக்களும் எமது மக்களுக்கான அரசியல்தீர்வாக பன்னாட்டுச் சமூகத்துக்கு முன்மொழிவது எமது மக்களுக்கான தன்னாட்சியுரிமையுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பாகவே இருக்க வேண்டும்.
அதைநோக்கியே எமது வேண்டுகைகளும் வேலைத்திட்டங்களும் அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்த குரலாக எமது அரசியல் வேட்கையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

அதேவேளை எமது போராட்டத்தின் ஆணிவேராகவிருக்கும் தாயகத் தமிழர்களின் தற்போதைய இன்னலைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அனைவரையும் நினைவிற்கொள்வதோடு எமது புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இப்பணியை முன்னெடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

இறுதி யுத்தமென்று கூறிக்கொண்டு எமது மக்கள்மேல் பகைவர் தொடுத்த கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகொள்ளும் இவ்வேளையில் அவர்களின் குடும்பங்கள் உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் வலுவாக முன்னெடுத்து எமது இறுதி இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்து போராடுவோமென இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

20 ஆம் நூற்றாண்டிலும் இப்படி நிகழுமா

புராண காலத்தில் தான், பெண்களின் மூக்கை அறுப்பது குறித்து நாம் படித்திருப்போம். குறிப்பாக சூர்பனகையின் மூக்கு அறுக்கப்பட்ட விடையம். ஆனால் ஆயிஷா வின் விடையம் 20ம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது ! அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மிக மிகப் பிரபல்யமான ரைம்ஸ் சஞ்சிகை, இதுவரை காலமும், அரசியல் தலைவர்களையும் பிரமுகர்கள் படத்தையுமே தனது அட்டைப் படத்தில்(முன்புறத்தில்) பிரசுரித்து வந்தது. ஆனால் அது தற்போது ஒரு சாதாரண பெண்ணான ஆயிஷா குறித்து தகவல்களை சுமந்து வந்துள்ளது !

சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலம் !

ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த ஆயிஷா என்னும் பெண், சுமார் 12 வயதில் இருக்கும்போதே அவரது தகப்பனார் தனது மகளை ஆப்கான் தீவிரவாதி ஒருவருக்கு கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளாராம். தான் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் தான், இவர் இவ்வாறு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார். இதனால் ஆயிஷா மாப்பிள்ளை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் வசிக்குமாறு மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்(2010) ஆயிஷா 20 வயதாக இருக்கும்போது, அவருக்கு கட்டாய கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆயிஷாவுக்கு தனக்கு கணவராக வரப்போகும் நபரைப் பிடிக்கவில்லை. இதனால் அவர் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ ஆயிஷாவை மடக்கிப் பிடித்துவிட்டனர்.

ஆயிஷா தப்பிச் செல்ல முற்பட்டதற்கான தண்டனையாக, அவரின் மூக்கையும் காதுகளையும் அறுத்து எறிந்துள்ளார் மாப்பிள்ளை. மூக்கை வெட்டும் வேளையே தான் மயங்கிவிட்டதாக ஆயிஷா தெரிவித்துள்ளார். தான் மயக்கம் தெளிந்து எழுந்தவேளை, தனது காதுப் பகுதியிலும் மற்றும் மூக்குப் பகுதியிலும் ஈரப் பதம் இருந்ததை தான் உணர்ந்தேன் என்கிறார் ஆயிஷா. தான் இறக்கவேண்டும் என்பதற்காக, தன்னை ஒரு மலை அடிவாரத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள் என, தனது சோகக் கதையை அழுதவாறு விவரித்தார் ஆயிஷா. தன்னால் நடக்கக்கூட முடியாத நிலையில், தான் தவண்டு தவண்டு, தனது சிறிய தந்தையாரின் வீட்டை அடைந்ததாகவும், அவர் பின்னர் தன்னை அருகில் உள்ள தற்காலிக அமெரிக்க வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார் ஆயிஷா.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவென இருந்த இவ்வைத்தியசாலையில், இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஒரு தர்மஸ்தாபனம் ஊடாக அவர் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளர். 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அமெரிக்க காஸ்மெட்டிக் வைத்தியசாலை ஒன்று இவருக்கு செயற்கை மூக்கை பொருத்த முன்வந்துள்ளது. 2011ம் ஆண்டு ஆயிஷாவுக்கு அமெரிக்க அரசு அகதிகள் அந்தஸ்து வழங்கியிருந்தது. தற்போது நடைபெற்ற சிகிச்சையில், பிளாஸ்டிக் மூக்கு ஒன்று ஆயிஷாவுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இவர் உடல் நலம் தேறிவருகிறார். 20ம் நூற்றாண்டில் கூடவா பெண்களுக்கு இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்று தாம் அதிர்சியடைந்துள்ளதாக பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் இவ்வாறானதொரு, மூட நம்பிக்கை இல்லையேல் தாமே தண்டனை வழங்கும் ஒரு மனப்போக்கு காணப்படுகிறது. அல்லாவின் பெயரையும், மதத்தின் பெயரையும் தீவிர போக்குடைய முஸ்லீம் நபர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 90% சதவீதமான பெண்கள், பாலியல் அல்லது மனரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. தீவிரவாதப் போக்குக்கொண்ட முஸ்லீம் ஆண்கள் முற்போக்காளர்களாக மாறவிட்டாலும், பரவாயில்லை, குறைந்த பட்சம் மனிதர்களாக வாழ முயற்சி எடுப்பது நல்லது !